6 Aug 2007

இனி ஒரு விதி செய்வோம்

இதை பாரதி சொன்னது ஒரு பெண் தன் அடிமைத்தனத்தை, அவள் தலைவிதி என்று நினைக்காமல், அதை தகர்த்தெரிய வேண்டும் என்பதற்காக. ஆனால் பாரதி இதை சொல்லி 85 ஆண்டுகள் ஆகியும் ஒரு பெண் அடிமை சங்கிலிகளை தகர்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறாள்.



ஒரு பக்கம் - பெண் ஜனாதிபதி, பெண் முதல்வர் - இதனால் பெண்கள் முன்னேற்றம் அடைந்து விட்டார்கள் என்று அறைகூவல். ஆனால் இன்னொறு பக்கம் வேதனை - ஒரிசாவில் 22 பெண் சிசுக்கள் கொலை, அரியானாவில் மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை குறைகிறது, பெண் IAS, IPS அதிகாரிகளுக்கு பணி முன்னேற்றத்தில் முறையான வாய்ப்பு மறுப்பு, பெங்களுருவில் பெண் கணினி ஊழியர் கொலை, பணி இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை, ஆந்திராவில் இளம் பெண்கள் விற்பனை - இம்மாதிரி மனதைப் பிசையும் வேதனைகள் தொடர்வது நிதர்சனம். பெண்களை காட்சிப் பொருளாகவே சித்தரிக்கும் கொடுமை அறவே ஒழிந்தால் தான், பெண்ணின விடுதலை துளிராவது விடச் செய்யும்.

பாரதிக்கு இருந்த இப் பொது நல எண்ணம், பெண்களை காப்பாற்றுவதே தங்களின் தலையாய கடமை என பறைசாற்றும் மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் ஏன் இல்லாமல் போய் விட்டது? ஏனென்றால் பாரதியின் வரிகள் தான் இவர்களுக்கு தேவை பட்டது, அவனின் எண்ணம் அல்ல. இன்று பாரதி இருந்தால் இந்த சம்பவங்கள் நடந்திருக்குமா.



சம்பவம் - 1
வந்தனா ப்ரயாசி, அவரது தங்கை சுஜாதா ப்ரயாசி, மற்றும் அவரது குழந்தை, தில்லி - பாட்னா ரயிலில் A/C முதல் வகுப்பில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போழுது p.k.ராவல் என்ற நபர் குடி போதையில் தவறாக நடக்க முயற்சி செய்தார். இதில் வந்தனா ஒரு IAS அதிகாரி, பிஹார் உள்துறையில் Joint Secretary யாக பணியாற்றுகிறார், சுஜாதா பஞ்சாப் மாநில போலிஸ் உயர் அதிகாரியின் மனனவி, ராவல் ரயில்வே பாதுகாப்பு துறை DIG யாக பணியாற்றுகிறார்

சுஜாதா இந்த நிகழ்வுக்கு பிறகு. ராவல் மீது FIR பதிவு செய்தார். இதை கேள்விப்பட்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் ரயில்வே இதை புலனாய் செய்து விட்டார் இதில் ஒன்றும் இல்லை என்று பேட்டி அளித்தார்.

ஆனால் இதைப்ப்ற்றி பத்திரிகைகள் எழுதிய பிறகு, பெண்கள் நலவாழ்வுத்துறை அமைச்சகம் இதை கையில் எடுத்ததும் வேறு வழி இல்லாமல், இரண்டு பேர் கொண்ட விசாரணை குழு அமைத்தது ரயில்வே பாதுகாப்பு துறை. இந்த விசாரணையில் ராவல் மீது குற்றம் கண்டுபிடிக்கப் பட்டு , குற்றம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீதி துறையில் உள்ள பல ஒட்டைகள் மூலம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அவர் பதவியில் இன்னும் தொடருகிறார்.

மக்களை பாதுகாக்க அமைக்கபட்ட ரயில்வே பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒரு பெண்ணிடம் தவறாக நடக்கிறார். ஆனால் அவரின் இந்த செயலை அந்த துறை அமைச்சர் இதில் ஒன்றும் இல்லை என்கிறார், அந்த துறை அமைச்சகம் அவரை பதவி விலக்க வில்லை, நீதி துறை அவரை ஜாமினில் விட்டது. ஒரு IAS அதிகாரிக்கே இந்த நிலமை என்றால் மற்ற பெண்கள் நிலமை ?. எங்கே பெண் பாதுகாப்பு, எங்கே பெண் விடுதலை?


சம்பவம் - 2

ஆஸ்மா செய்க் என்று 10 வயது சிறுமி மும்பை மருத்துவமனையில் அம்மா அம்மா என்று அல்ர, உடனே அவளது அம்மா வந்து அவளுக்கு ஆறுதல் சொல்கிறார். அந்த சிறுமிக்கு கையில் இரண்டு இடத்தில் முறிவு, விலா எலும்பு இரண்டு முறிந்துள்ளது, இடுப்புக்கு கீழே தோல் வழுண்டுவிட்டது. இத்தனையும் அவளுக்கு ஒரு விபத்தினால் எற்படவில்லை. ஒரு மிருகத்தினால் எற்பட்டது, ஆம் ஒரு சில மனித மிருகங்களால் எற்பட்டது.

ஆஸ்மாவும் அவளது அக்காவும் பள்ளி முடிந்து வரும் போழுது இந்த சம்பவம் ஏற்பட்டது. அப்பொழுது காரில் வந்த சில மாணவர்கள் இந்த சிறுமியை கேலி, கிண்டல் செய்ய அவள் அலறிய படி ஓட ( 10 வயது சிறுமி வேறு என்ன செய்வாள் ). அந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்ற பொழுது அவர்கள் கார் இந்த சிறுமி மீது மோத, அவளுக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் கழித்து அவர்கள் license இல்லாமல் கார் ஓட்டினார்கள் என்று வழக்கு பதிவு செய்தது போலீஸ், நான்கு நாள் கழித்து நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.


அஸ்மாவின் தாயார், என் குழந்தைக்கு நீதி வேண்டும் என்று கோருகிறார். அவர்களுக்கு நீதி கிடைக்குமா. இந்த " eve - teasing " கொடுமைக்கு இன்னும் எத்தனை ஆஸ்மாகள் மாட்டிக் கொள்வார்களோ. இன்னும் எத்தனை பெண்களை இந்த அரக்கன் கொண்டு செல்வானோ. ஏன் "eve-teasing" செய்பவர்களுக்கு நமது அரசியல் சாசனத்தில் ஒரு மாற்றம் செய்து ஏன் மரண தண்டனை வழ்ங்கக்குடாது. நீதிமன்றம் இந்த் வழக்கில் ஒரு முன்னுதாரண தீர்ப்பை ஏன் வழங்கக்கூடாது. இது அந்த சிறுமியை குணமாக்காது ஆனால் இன்னும் ஒரு ஆஸ்மாவிற்கு இந்த நிலை ஏற்ப்படாமல் தடுக்கும்.


நாம் எங்கே செல்கிறோம், பெண் விடுதலை. பெண் சுதந்திரம் என்பது பேச்சளவு தானா. பெண்களுக்கு 33% இட ஓதுக்கிடு, இதை 10 ஆண்டுகளாக சொல்லி கொண்டு இருக்கிறோம், இன்னும் 50 ஆண்டுகள் சொல்லிக் கொண்டிருப்போம். பெண் சிசுக் கொலை, உடன் கட்டை கொடுமை, ஏன் இதை சரி செய்ய ஒரு தலைவன் இல்லை. பெண்கள் பேரணி, மனித சங்கிலி, போராட்டம், இப்படி ஒரு சம்ப்ரதாய அரசியல் செய்கிறார்கள் நம் அரசியல் தலைவர்கள். " ஒரு பெண் நள்ளிரவில் என்று தனியாக செல்ல முடிகிறதோ அன்று இந்தியா முழு சுதந்திரம் அடைந்து விட்டது " என்று அண்ணல் காந்தியடிகள் சொன்னார், ஆனால் இன்று பட்டபகலில் கூட ஒரு பெண் தனியாக செல்ல முடியவில்லை.

பெண்கள் முன்னேற்றம் என்பது அப்துல் கலாம் சொன்னது போல் " கனவு காணுங்கள் " என்று ஆகிவிடுமோ ?
பிழைகளை திருத்துவோம்