
ஒரு விவசாயி lucknow உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார், தான் விவசாயி என்பதை நிரூபிப்பதற்காக. ஏனென்றால் அந்த நிலம் இல்லை என்றால் அடுத்த வேளை உணவு கிடைக்காது என்பதற்காக அல்ல, தன் கவுரவத்தையும், தான் விவசாயி என்பதையும் நிரூபிப்பதற்காக. இந்த விவசாயி மற்ற இந்திய விவசாயிகள் போல் அல்லாமல் rolls royce கார் வைத்துள்ளார், இந்தியாவின் கோடிஸ்வரர்களில் ஒருவராக உள்ளார், இந்திய அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார், இந்திய திரை உலகின் சக்கரவர்த்தியாக திகழும் அவர் அமிதாப் என்று அழைக்கப் படுகிறார். இப்படி இருந்தும் வழக்கு தொடுத்ததற்கு காரணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு சட்டம்.
அந்த மாநிலத்தில் விவசாய நிலத்தை வாங்க ஒரு விவசாயியால் மட்டுமே முடியும். இப்படி இருந்தும் லோனாவாலாவில் 24 ஏக்கர் நிலத்தை அவர் வாங்கினார். இதை பத்திரிக்கைகள் அம்பலபடுத்தியதும், அந்த மாவட்ட கலெக்டர் இதை விசாரிக்க உத்தரவிட்டார். உத்திரப்பிரதேசத்தில் பாரபங்கியில் நிலம் வைத்திருக்கிறேன் என்று அவர் சொல்ல, அதை நிரூபிக்க பாரப்ங்கி மாவட்ட கலெக்டருக்கு அமிதாப் விண்ணப்பத்தை அனுப்பினார். அதை ஆய்வு செய்த அவர், நில பத்திரங்கள் அமிதாப்புக்கு சாதகமாக செய்யப் பட்டிருப்பதை கண்டு பிடித்தார். அதை செய்த ஊழியரை தற்காலிக பணிநீக்கம் செய்தார். உடனே அந்த கலெக்டரை வேறு ஊருக்கு தூக்கி அடித்தது அப்போது நடந்துகொண்டு இருந்த அமிதாப்பின் நண்பர்களான முலாயம் சிங் அரசு. புதிதாக வந்த கலெக்ட்ர் அமிதாப்பின் நில பத்திரங்களை அவரிடம் அளித்தார்
இப்போழுது வந்து உள்ள மாயாவதி அரசு இந்த கேஸை திரும்ப எடுத்தது. பைசாபாத் நீதிமன்றம் பழைய கலெக்டரின் முடிவு தான் சரி என்று தீர்ப்பு அளித்தது. மற்றும் அந்த நிலம் அவருடையது அல்ல என்றும், அமிதாப் ஒரு விவசாயி அல்ல என்றும் தீர்ப்பு அளித்தது.
இதன் பிறகு அமீர்கான் தானும் ஒரு விவசாயி என்று பேட்டி அளித்தார். ஏனென்றால் அவரும் மகாரஷ்டிராவில் விவசாய நிலத்தை வாங்கி உள்ளார். நர்மதா அணை மூலம் நிலம், வீடிழந்த மக்களுக்காக குரல் கொடுக்கும் இவர், எப்படி ஒரு விவசாய நிலத்தை வாங்கினார்.
நன்கு படித்த, மிக நன்றாக பணம் சம்பாதிக்கும் அமிதாப், அமிர்கான் பொன்றவர்களுக்கு விவசாயி என்பதன் அர்த்த்ம் யார் சொல்லி கொடுப்பார்களோ. சினிமாவில் நடிக்க தெரிந்த இவர்களுக்கு நிஜ வாழ்க்கையில், விவசாயியாக நடிக்கத் தெரியவில்லை. இவர்கள் ஊருக்கு மட்டும் தான் உபதேசம் செய்வார்கள் போலும்.
பிழைகளை திருத்துவோம்